பிரசவத்திற்குப் பின் ஏற்படும் தொப்பையை குறைக்க சில டிப்ஸ்!


பெண்களுக்கு பல்வேறு காலங்களில் உடல் எடை அதிகரிக்கலாம். பொதுவாகக் கருவுற்ற பின் அவர்களின் உடலில் அதிகளவு மாற்றம் இருப்பதைக் காண முடியும். பிரசவத்திற்குப் பின் குண்டானால் மீண்டும் பழைய நிலைக்கு உடலைக் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்றாகும். 

இங்குப் பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையைக் குறைக்க உதவும் சில எளிய வழிமுறைகளைத் வழங்கியிருக்கின்றோம்.

நடைப்பயிற்சி:

குழந்தையுடன் ஏரியோபிக்ஸ் பயிற்சியில் ஈடுபடலாம். அதுமட்டுமின்றி, தினமும் குழந்தையை அழைத்துக் கொண்டு மெதுவாக 1 மைல் தூரம் நடந்தால், 100 கலோரிகளை எரிக்கலாம். 

பயிற்சி:

சுவரில் சாய்ந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று 10 நொடிகள் இருக்க வேண்டும். பின் எழ வேண்டும். இப்படி தினமும் 20-25 முறை செய்தால், அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும். 

எளியப் பயிற்சி:

தரையில் படுத்துக் கொண்டு, பாதத்தைத் தரையில் பதிக்குமாறு முழங்காலை மடக்கி, கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் படத்தில் காட்டியவாறு உடலை மேல் நோக்கித் தூக்கி, பாலம் போன்ற நிலையில் இருக்க வேண்டும். இப்படி 5-6 நொடிகள் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தைத் தினமும் 4-5 நிமிடம் செய்து வந்தால், தொப்பையைக் குறைக்கலாம். 

யோகா:

தினமும் யோகா பயிற்சியை செய்வதன் மூலமும் அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். அதிலும் கும்பகாசனம், ஹஸ்தபடோடாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றை மேற்கொண்டால், தசைகள் இறுகி வலிமையடையும். 

தாய்ப்பால்:

ஆம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம். எப்படியெனில் தாய்ப்பால் கொடுக்கும் போது, ஆக்ஸிடோசின் வெளியிடப்பட்டு, கருப்பைச் சுருங்கி, பழைய நிலைக்கு வேகமாக மாறி, வீங்கிக் காணப்படும் வயிறு குறையும்.

Comments